Wednesday, March 13, 2013

அமெரிக்க தீர்மானம் மகா அயோக்கிய தீர்மானமானது 13/03/2013

அமெரிக்க தீர்மானம் மேலும் திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது, இது தீர்மானமா இல்லை பாராட்டு பத்திரமா என்ற சந்தேகம் வருகிறது. தங்கள் நாட்டின் சொந்த குடிமக்கள் 1,50,000 மக்களை கொன்று குவித்த (வன்னியின் மறைமாவட்ட ஆயர் சொல்லும் கணக்கு) நாட்டை ஏன் ஐ.நாவின் அறிக்கையின் படி இலங்கை அரசு 40,000 பேரை கொலை செய்ததாக கூறுகிறது. இப்படி ஒரு அரசை நாங்கள் கண்டிக்கமாட்டோம், அரசு செய்ய வேண்டிய வேலைகளை அவசரப் படுத்தமாட்டோம். அவர்கள் வேலையை அவர்கள் செய்ய ஊக்குவிப்போம் என்கிறது அறிக்கை. அதுவும் அவசரமாக செய்யவேண்டும் என்று குறிப்பிட்ட இடங்கள் எல்லாம் திருத்தப்பட்டு ஊக்கப்படுத்த வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசு ஊக்கு விற்றால் என்ன பாசி விற்றால் நமக்கு என்ன???? 




மாணவர்களாகிய நாம் ஊக்கு விற்கும் இந்த் தீர்மானத்தை தொடர்ந்து எரிப்போம்.. 

Tuesday, March 12, 2013

அமெரிக்காவில் கொண்டுவரப்படும் தீர்மானம் வரைவு ஒரு பார்வை


 அமெரிக்கா இலங்கை அரசியல் சாசனத்தின் கீழ் இயங்கும்  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முக்கியமாக செயல்படுத்த சொல்லி இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இலங்கையின் அரசியலமைப்பு சட்டம் அங்கு வாழும் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்காமல் அவர்களை ஒடுக்கியதாலே கடந்த 60 ஆண்டுகளாக விடுதலை போராட்டம் நடந்து வருகிறது. ஒரு நாட்டின் அரசியலமைப்பு சட்டம் என்பது அந்த நாட்டின் மக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் எப்பொழுது அதில் இருந்து தவறுகிறதோ அப்பொழுது அந்த அரசியலமைப்பு சட்டம் தோல்வியடைந்ததாக அர்த்தம். 

ஆனால் அமெரிக்க தீர்மானம் தோல்வி அடைந்த ஒரு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தீர்வு காணச் சொல்கிறது. இந்த தீர்மானம் எந்த வகையிலும் ஈழத்தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காது, அமெரிக்கா தனது சுயதேவைக்காக இலங்கையிடம் பேரம் நடத்தவே இந்த் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இதை தமிழர்களாகிய நாம் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது இதை தாண்டி இந்த தீர்மானத்தை நம்மை ஏற்றுக் கொள்ள சொல்பவர்களின் எண்ணங்கள் செயல்பாடுகளை நாம் சந்தேகிக்க வேண்டிய தேவை உள்ளது.





இந்த தீர்மானத்தில் நவநீதம் பிள்ளையின் அறிக்கையை பாராட்டிய பொழுதும் அவர் சொன்ன உதவிகளை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொன்னாலும் அதை இலங்கை அரசின் ஒப்புதலுடனேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது. போர் முடிந்து நான்கு வருடங்களாக சர்வதேசத்தை போர் நடந்த பகுதிக்கு அனுமதிக்காத இலங்கை அரசு இந்த தீர்மானத்தின் படி நவநீதம் பிள்ளை அளிக்கும் உதவிகளை ஏற்றுக் கொள்ளும் என்பது நமது கண்களை கட்டிவிட்டு மேலும் ஒரு வருடம் இலங்கை தனது இன அழிப்பு நடவடிக்கைகளை தொடர்வதற்கு உதவும் நோக்கத்துடனே கொண்டுவரப் பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நவநீதம் பிள்ளை சொல்லியிருக்கிறார் தனது அறிக்கையில் ஆனால் அதை செயல்படுத்தும் ஒரு முறையை இந்த தீர்மானம் பேசவில்லை. அதற்கு பதிலாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்று மட்டும் அறிவிக்கிறது. இவர்கள் கவனத்தில் வைப்பதால் நமக்கு என்ன பயன். சரியாக செய்வதென்றால் இலங்கைக்கு ஒரு குறுகிய காலக்கெடு கொடுத்து அதற்குள் சரி செய்யவேண்டும் இல்லாவிடில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும் ஆனால் அப்படி சொல்லாமல் மொட்டையாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்பது எந்தவித அரசியல் என்று தெரியவில்லை.

முதலில் எஞ்சியுள்ள மக்களுக்கு நன்மை செய்வோம் என்பது நம் தமிழ் மக்களை பிச்சைகாரர்களாக்குவது தானே ஒழிய அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வழிசெய்வது இல்லை. மாணவர்கள் போராட்டம் கோரிக்கை என்பது சர்வதேச விசாரணையையும் பொது வாக்கெடுப்பையும் வலியுறுத்துகிறது. இவைகளுக்கான நடவடிக்கை எடுக்கப் படும்பொழுது சிங்கள இராணுவத்தை அகற்றிவிட்டு தமிழர்கள் வாழும் பகுதிகள் ஐ.நாவின் பாதுகாப்பு படையின் நேரடி பார்வையின் கீழ் வரும் அப்பொழுதும் தமிழர்களை பாதுகாக்க முடியும், மேலும் அவர்களுக்கான நிவாரண உதவிகளையும் வழங்க முடியும் இதை மறைத்து பேரினவாதத்தின் கைகளாலேயே நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி வருகிறரவர்கள் சிறிது யோசிக்க வேண்டும். 

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு கோரி மாணவர் போராட்டம்


ஒரு இனத்தையே அழிக்கும் நோக்குடன் ஒரு சர்வாதிகாரம் அல்லது பேரினவாதம் நடந்து கொண்டது என்பதை இது வரை கேள்விப்பட்டுமே வந்த தமிழினத்தின் மீது ஒரு இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது ஆனால் இதை இந்த சர்வதேச சமூகம் இது வரை இனப்படுகொலை என்று குறிப்பிடாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வாழ்வு என்று பேசிவருவது, இழைக்கப்பட்ட கொடுமைகளை மறந்துவிடுங்கள் இந்த கசப்பான மருந்தை கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுவது போல் உள்ளது ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம். இந்த தீர்மானம் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் தான் கசப்பானதாக உள்ளது. உண்மையில் சிங்கள பேரினவாத அரசிற்கு இது மேலும் ஒரு வருடம் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தும் வாய்ப்பையே வழங்கி வருகிறது. சிங்கள அரசின் மும்மொழி கொள்கை திட்டம் என்பது போன்ற திட்டங்களால் தமிழ் பண்பாடு என்பதை ஒழித்துக் கட்டும் வேலைகளுக்கு வழிவகை செய்கிறது.

மனித உரிமை ஆணயத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் இந்த தீர்மானம் மனித உரிமை மீறல்களை கூட பேசும்பொழுது மயிலிறகால் வருடிகொடுத்து தான் பேசுகிறது. தமிழ் மக்களுக்கான தீர்வாகச் சொல்வது, மனித உரிமை ஆணையம் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு நன்றியையும் சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக 13வது சட்டதிருத்ததை கைவிடக்கூடாது என்று சொன்ன சிங்கள உச்சநீதிமன்ற நீதியரசரை பதவியிலிருந்து நீக்கிய சிங்கள அரசு தனது சட்டத்தை சர்வதேச சட்டத்திற்கு நிகராக வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறது. இதன் மூலமாக ஒரு குற்றவாளி தனது குற்றத்தை சர்வதேச சட்டத்திற்க்கு இணையாக கொண்டுவந்து விசாரிக்க வேண்டும் என்கிறது. குற்றவாளியே தன் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று சொல்லும் இந்த தீர்மானம் எந்த வகையில் ஈழத்தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் என்பது தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் செயல்.

மேலும் பிப்ரவரி 15ம் தேதி 2013, அன்று இந்த அமெரிக்க தீர்மானம் வலியுறுத்தும் LLRC மூலமாக கொண்டுவரப்பட்ட இராணுவ நீதிமன்றத்தில் இலங்கை இராணுவம் எந்தவிதமான போர்குற்ற மீறல்களையும் செய்யவில்லை என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. குற்றவாளியே குற்றத்தை விசாரிக்க சொன்னால் இத்தகைய தீர்ப்புகள் தான் வரும் என்பதை ஏன் சர்வதேச சமூகம் உணர மறுக்கிறது என்பது புரியவில்லை. போர் முடிந்து இது வரை நான்கு ஆண்டுகளில் சர்வதேச பத்திரிக்கையாளர்களையோ அல்லது மனித உரிமை அமைப்புகளையோ ஈழத்தில் தமிழர் வாழும் பகுதிகளில் அனுமதிக்காத சிங்கள பேரினவாத அரசு, ஏன் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளையை அனுமதிக்க மறுக்கிறது, ஐ.நாவின் தலைமை செயலாளர் பான் கீ மூன் அவர்கள் நியமித்த நிபுணர் குழுவை அனுமதிக்க மறுத்த சிங்கள பேரினவாத அரசு எப்படி தமிழர்களுக்கான தீர்வை கொடுக்கும். இவைகளை குறித்த எந்தவித கண்டனத்தையும் அமெரிக்காவின் தீர்மானம் சொலல்வில்லை, ஆனால் ஐ.நா மனித உரிமை பாதுகாப்பு செயலகத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லியுள்ள சர்வதேச நீதி விசாரணையை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறது, அதன் மீதான ந்டவடிக்கைக்கு ஒரு காலவரையறையையோ அல்லது மனித உரிமையை பாதுகாக்கும் பணிகளை சரியாக செய்யவில்லை என்றால் சர்வதேச விசாரணையை கொண்டு வருவோம் என்றோ அமெரிககாவின் தீர்மானத்தில் இல்லை.

இலங்கையின் அரசியல் சாசனம் என்பது தோற்று போனதாலேயே 1948ல் இருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு நாட்டின் அரசியல் சாசனம் என்பது அந்நாட்டின் அனைத்து குடிமக்களையும் சம உரிமையுடன் நடத்துவதாக அமையவேண்டும் ஆனால் என்று எந்த அரசியல் சாசனம் தமிழர்களின் கல்விகற்கும் உரிமையை கூட கல்வி தரப்படுத்துதல் சட்டம் என்ற பெயரில் பறித்ததோ அன்றே தோற்றுப்போய்விட்டது.  தோற்றுப்போன அரசியலமைப்பை அங்கிகரித்து அதன் கீழ் நடவடிக்கை எடுக்க கூறுகிறது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம். ஒரு தோற்றுப்போன் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை அடித்தளமாக கொண்டு இயங்கும் ஒரு நாட்டின் இறையாண்மை என்பதும் தோற்றுப்போனதே அப்படி தோற்றுப்போன இறையாண்மையற்ற நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பது என்பது சர்வதேசத்தின் கடமை. இதற்கு இந்தியாவும் இலங்கையுடன் துணை போவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா சர்வதேசத்தின் முன்பு இலங்கையை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் இதை வலியுறுத்தியே மாணவர்களின் போராட்டம் நடைபெறுகிறது.

“தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தேவை சுதந்திரமே தவிர பிச்சையாக போடப்படும் நிவாரணங்கள் அல்ல”

கோரிக்கைகள்

1.      அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நாவில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மான ஈழத்தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கவில்லை.
2.      இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
3.      சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேச விசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்
4.      சிங்களஇனவெறிஅரசின்துணைத் தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.
5.      தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
6.      உலகத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.
7.      ஆசியநாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது..
8.      தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
9.      ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.


மாணவர் போராட்ட அறிமுகமும் கோரிக்கைகளும்.

லயோலா கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஈழ தமிழ் மக்களுக்கான விடுதலை போராட்டம். இன்று தமிழகம் முழுவதும் தனது சுதந்திர சிறகுகளை விரித்து பறந்து கொண்டுள்ளது. இந்த இணையத்தின் மூலமாக போராட்ட நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும். மாணவர்கள் தங்கள் போராட்டத்திற்கான துண்டறிக்கைகள் மற்றும் தேவையான போராட்ட கோரிக்கைகளையும் அறிந்துகொள்ள இந்த இணையம் உதவும். மேலும் போராட்ட நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள உதவும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது.

இந்த மாணவர்கள் போராட்டத்தின் கோரிக்கைகள் 


  1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நாவில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மான ஈழத்தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கவில்லை.
  2. இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
  3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேச விசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும் 
  4. சிங்களஇனவெறிஅரசின்துணைத் தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும். 
  5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் 
  6. உலகத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும். 
  7. ஆசியநாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது..
  8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 
  9. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.